மான்செஸ்டர்

டும் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிவறை என நினைத்து அவசரக் கதவை ஒரு பாகிஸ்தான் பெண் திறந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

பாகிஸ்தான் இண்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் என்பது பாகிஸ்தான் அரசால் நடத்தப்படும் சர்வ தேச விமான சேவை நிறுவனம் ஆகும். கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு இந்த நிறுவன விமானம் மான்செஸ்டரில் இருந்து இஸ்லாமாபாத் செல்ல தயாராக இருந்தது.  . ஒரு சில காரணங்களால் இந்த விமானம் சற்று தாமதமாக கிளம்பி உள்ளது.

அந்த விமானம் ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது திடீரென ஒரு பாகிஸ்தான் பெண்மணி அவசர காலத்தில் வெளியேறும் கதவை திறந்துள்ளார். விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போது விபத்து உள்ளிட்ட அவசரக் காலங்களில் வெளியேற உபயோகிக்கும் அந்த கதவை திறந்ததும், பாரசூட் உள்ளிட்ட உபகரணங்கள் வெளியே வந்துள்ளன.

அத்துடன் எச்சரிக்கை மணி ஒலிக்க தொடங்கி உள்ளது.  விமானம் உள்ளேயும் வெளியேயும் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.  விமான விதிகளின்படி உடனடியாக விமான நிலையத்துக்கு திரும்பிய அந்த விமானத்தில் இருந்த அனைத்து  சாமான்களும் பயணிகளும் இறக்கப்பட்டனர்.

அவசரக் கதவை திறந்த அந்த பாகிஸ்தானியப்  பெண் கழிவறை என நினைத்து இந்த கதவை திறந்ததாக தெரிவித்துள்ளார்.   இறக்கப்பட்ட விமானப் பயணிகளுக்கு தங்குமிடம் உள்ளிட்ட வசதிகள் அளிக்கப்பட்டு அதன் பிறகு வேறு விமானங்களுக்கு மாற்றப்பட்டனர்.