சென்னை

பாஜகவின் மத்திய அமைச்சரவையில் திமுக சேராது என திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றது. நாடெங்கும் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியை பிடித்து அமைச்சரவை அமைத்துள்ளது. இந்த அமைச்சரவையில் அதிமுகவை சேர்ந்த தமிழக மக்களவைஉறுப்பினரான ரவீந்திர நாத் இடம் பெறுவார் என எதிர்பார்த்த வேளையில் பாஜக அரசு அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு சில பத்திரிகைகளில் இன்னும் ஆறு மாதத்தில் பாஜக கூட்டனியில் திமுக இணையும் எனவும் அப்போது மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெறும் எனவும் செய்திகளை வெளியிட்டன. இது மக்களிடையே கடும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்கள் திமுக மக்களவை உறுப்பினர் டி ஆர் பாலுவிடம் கேள்விகள் எழுப்பினர்.

டி ஆர் பாலு, “ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்தின் போதும் அதற்கு பொறுப்பு ஏற்றுள்ள மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டத்துக்கு ஆதரவு கோருவது வழக்கமாகும். அதன்படி பாராளுமன்ரா விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் இணை அமைச்சர் அர்ஜுன் ராம் ஆகியோர் என்னை சந்தித்து பேசி நாடாளுமன்ற நிகழ்வுகள் குறித்து தகவல்கள் அளித்தனர்.

ஒரு சில பத்திரிகைகள் அதை திரித்து இன்னும் அறு மாதத்தில் பாஜகவின் அமைச்சரவியில் திமுகவினர் பங்கு பெறுவார்கள் என பொய் தகவல் வெளியிட்டுள்ளன. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் அவருடைய தொண்டர்களும் வெளிப்படையானவர்கள். அது மட்டுமின்றி அவர்கள் ஒளிவு மறைவற்ற நேர்மையான ஜனநாயகத்தின் கண்கள் என்பதை வரலாறு அறியும்” என பதில் அளித்தார்.