டில்லி:

மிழகத்திற்கு கொடுக்க வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை தாமதமின்றி உடனே கர்நாடகம் திறந்து விட வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது.

காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழுக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி சார்பில் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டம்,  குழுவின் தலைவர் நவீன் குமார் தலைமையில் நடைபெற்து.

இதில், தமிழகத்தின் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, காவேரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் மற்றும் அதன் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், 4 மாநில பிரதிநிதிகளும் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்த புள்ளி விவரங்களை  சமர்பித்தனர்.

அப்போது, இதுவரை பூஜ்யம் புள்ளி ஏழு ஆறு ((0.76)) டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாக தெரிவித்த தமிழக அதிகாரிகள், எஞ்சிய 9.19 டி.எம்.சி தண்ணீரை வழங்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.