
சின்னத்திரையில் சுமார் 20 வருடங்களாக பல்வேறு சீரியல்கள் மூலம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ராதிகா சரத் குமார்.
நடிகை, தயாரிப்பாளர், தொழிலதிபர் என பல்வேறு திறன்கள் பெற்று விளங்குகிறார்.
மறுபிறவி, இது கதா காது, சித்தி, அம்மாயி காப்புறம், அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே, புரியாமல் பிரிந்தோம், வாணி ராணி என தமிழ், தெலுங்கு சீரியல்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் சமீபத்தில் சின்னத்திரையில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில் தனது பிரபல தொடரின் இரண்டாம் பாகத்துடன் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்ப உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel