டில்லி:

லக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய வீரர் தோனியின் கையுறையில், இந்திய ராணுவ முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. இது சர்ச்சையான நிலையில், அதை அகற்றும்படி ஐசிசிஐ, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐக்கு கடிதம் எழுதியது.

இதைத்தொடர்ந்து, தோனி கையுறையை மாற்றக்கூடாது என சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் வீறுகொண்டு எழுந்தனர். இந்த நிலையில், இந்திய ராணுவ முத்திரை பொறித்த விக்கெட் கீப்பிங் கையுறையுடன் டோனி போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஐ.சி.சி.க்கு, இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலககோப்பை கிரிக்கெட் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 5ந்தேதி நடைபெற்ற தென்னாப்பிரியாவுடன் ஆன முதல் போட்டியில் இந்தியா  6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின்போது, தோனியுன் கையுறை ரசிகர்களின் கவனத்தை ஈரத்தது. அதில் பச்சை வண்ணத்தில் இந்திய ராணுவத்தின் பாரா கமாண்டோ முத்திரை  பதியப்பட்டிருந்தது.

தோனிக்கு இந்திய அரசு  இந்திய ராணுவத்தின்  கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கி கவுரவித்து உள்ளது. இதன் காரணமாக அவர்  தான் சார்ந்த ராணுவ பிரிவுக்கு மரியாதை சேர்க்கும் வகையில்,  தனது விக்கெட் கீப்பிங் க்ளவுசில் ராணுவ முத்திரையைப் பதிந்து வைத்துள்ளார்.

இதை கண்ட சிலர் சர்ச்சையை கிளப்ப உலக கிரிக்கெட் வாரியமான  ஐசிசி, இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ -க்கு கடிதம் எழுதியது.அதில், சர்வதேசப் போட்டிகளில் அரசியல், மதம், இனவாதம் குறித்த குறியீடுகளை வெளிப்படுத்தக் கூடாது என்பது விதி,. அதை கடைபிடிக்க இந்திய வீரர்களை அறிவுறுத்துமாறு கூறியிருந்தது.

இது இந்திய ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இது மதம், இனம் சம்பந்தப்பட்டது அல்ல என்றும்,  தோனி இந்திய ராணுவத்துக்குச் செய்யும் மரியாதை, அது ராணுவத்தின் ஒரு குறியீடு அதை அகற்றக்கூடாது,  கடும் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து #DhoniKeepTheGlove என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கானது.

இந்த நிலையில், ராணுவ முத்திரை பதித்த கையுறையுடன் டோனி விளையாட அனுமதிக்க வேண்டும்  இந்திய கிரிக்கெட் வாரியமமான பிசிசிஐ  வேண்டுகோள் விடுத்துள்ளது

இது குறித்து பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் கூறும்போது, ‘டோனி விக்கெட் கீப்பிங் கையுறையில் பதித்துள்ள முத்திரையுடன் உலக கோப்பை போட்டியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று ஏற்கனவே  முறைப்படி ஐ.சி.சி.க்கு வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவும்,  ஐ.சி.சி. விதிமுறைப்படி வீரர்கள் தனிப்பட்ட வர்த்தகம், மதம் மற்றும் இனம் சார்ந்த லோகாவை தான் பயன்படுத்தக்கூடாது. ஆனால் டோனி பயன்படுத்துவது அது சார்ந்தது இல்லை என்பது எங்களுக்கு தெரியும் என்று  கூறினார்.

மேலும், தோனி கிளவுசில் உள்ள . முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐ.சி.சி வேண்டுகோள் தான் விடுத்து உள்ளது, அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்று சொல்லவில்லை என்றும், இதுகுறித்து  இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ஐ.சி.சி. சீனியர் நிர்வாகிகளை சந்தித்து விளக்குவார் என்று கூறினார்.

இந்த விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரென் ரிஜிஜூ தனது டுவிட்டர் பதிவில், ‘இந்த பிரச்சினை நாட்டு மக்களின் உணர்வுடன் தொடர்புடையதாகும். நாட்டின் நலனை மனதில் கொள்ள வேண்டும். டோனி வி‌‌ஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் நியாயமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் சுரே‌‌ஷ் ரெய்னா, மல்யுத்த வீரர் யோகே‌‌ஷ்வர் தத் உள்பட பலரும் டோனிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ஆனால், பாகிஸ்தான் மந்திரி பவாத் சவுத்ரி டோனியின் கையுறைக்கு  எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.  ‘கிரிக்கெட் விளையாட தான் டோனி இங்கிலாந்து சென்றுள்ளார். அவர் ஒன்றும் மகாபாரத போருக்கு போகவில்லை. இந்த வி‌‌ஷயத்தை இந்திய மீடியாக்கள் முட்டாள்தனமாக விவாதித்து கொண்டு இருக்கின்றன. போரை பற்றி கவலைப்படும் சில இந்திய ஊடகங்கள் டோனியை ராணுவ வீரராக்கி அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவன்டாவுக்கு அனுப்பி வையுங்கள்’ என்று சாடியுள்ளார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாளை  இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெறும் போட்டியின்போது,  டோனி இந்தியராணுவ முத்திரை பதித்த கிளவுஸ் அணிவாரா என்பது பலத்த எதிர்பார்பை ஏற்படுத்தி உள்ளது.