டோக்கியோ: ஜப்பான் நாட்டில் பணியிடங்களில் பெண்கள் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிவது அவசியமானது மற்றும் பொருத்தமானது என்று வலியுறுத்தியுள்ளார் அந்நாட்டு சுகாதாரம் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்.
பணியிடங்களில் பெண்கள் கட்டாயம் உயரமான ஹீல்ஸ் செருப்பு அணிய வேண்டுமென்ற விதிமுறையை எதிர்த்து ஒரு பெண்கள் குழுவால் வழக்கு தொடரப்பட்டது.
எனவே, இந்த மனு மீது விளக்கமளிக்குமாறு அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு அவர் மேற்கண்டவாறு கூறினார். பெண் பணியாளர்கள் மற்றும் வேலைதேடும் பெண்கள் கட்டாயம் இத்தகைய காலணியை அணிய வேண்டுமென எதிர்பார்க்கும் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு தடைவிதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த காலணிக்கு எதிரான போராட்டம் முதன்முதலாக நடிகையும், பத்திரிகையாளருமான யுமி இஷிகாவால் தொடங்கப்பட்டது. அந்தப் போராட்டம் வெகுவிரைவிலேயே பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.