டெல்லி:
பிரியங்கா காந்தியின் கணவர் , ராபர்ட் வதேரா மீது கருப்பு பண தடுப்பு சட்டம் கீழ் தொடரப்பட்ட வழக்கு உள்பட பல வழக்குகளை நிலுவையில், அவர் மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் அவருக்கு 6 வாரம் சிபிஐ சிறப்புநீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ராபர்ட் வதேரா மருத்துவ சிகிச்சைக்காக ஆறு வாரங்களுக்கு வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதிக்கிறது.
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா மீது பிரிட்டன் தலைநகர் லண்டனில் சொத்துகள் வாங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் தற்போதுவரை ராபர்ட் வதேரா ஜாமினில் உள்ளார். வதேரா இதுவரை 11 முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி வந்துள்ளார்.
இந்த நிலையில், ராபர்ட் வதேராவுக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்திருந்தது.
இதற்கிடையில் டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் பிரிட்டன் உள்ளிட்ட 3 நாடுகளில் சுற்றுப்பயணம் செல்ல அனுமதிகோரி, ராபர்ட் வதேரா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து, உத்தரவை ஜுன் 3ம் தேதிக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், ராபர்வதேரா மருத்துவ சிசிக்சைக்கா வெளிநாடு செல்ல 6 வார காலம் அனுமதி வழக்கி டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.