சென்னை

மூத்த கிரிக்கெட் பயிற்சியளரும் இந்திய விமானப்படை முன்னாள் அதிகாரியுமான தர்மலிங்கம் நேற்று மரணம் அடைந்தார்.

முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியான தர்மலிங்கம் தமிழ்நாடு மற்றும் அகில இந்திய அளவில் பல வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.   இவர் பிரபல கிரிக்கெட் வீரரான கபில்தேவ் க்கு பயிற்சியாளராக பணி ஆற்றி உள்ளார்.   இவருடைய பயிற்சியின் கீழ் கபில் தேவ் கடந்த 1983 ஆம் வருடம் உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

தர்மலிங்கம் இரு தலைமுறை வீரர்களுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார்.   தமிழக மகளிர் கிரிக்கெட் அணிக்கும் பயிற்சி அளித்துள்ள இவர் ரஞ்சி கோப்பை போட்டியில் பலமுறை விளையாடியவர் ஆவார்.   இவர் விளையாடிய 29 போட்டிகளில் 1132 ரன்கள் எடுத்துள்ளார்.  அவரது அதிகபட்ச ரன்கள் 162 ஆகும்.   இவர் மொத்தம் 44 விக்கட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இவர் நேற்று சென்னையில் அவர் இல்லத்தில் மரணம் அடைந்துள்ளார்.    அவரது மறைவு கிரிக்கெட் உலகில் பலரையும் துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.   பல கிரிக்கெட் வீரர்கள் இவருக்கு தங்கள் கண்ணீர் அஞ்சலியை செலுத்தி உள்ளனர்.