சென்னை:

மிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளின் இடஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  இடஒதுக்கீட்டு பட்டியலின்படி பொதுப்பிரிவு வார்டு, பெண்களுக்கான வார்டு,  தாழ்த்தப்பட்டோர்களுக்கான வார்டு  விவரங்கள் வெளியாகி உள்ளன.

சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை, மொத்தம் உள்ள 200 வார்டுகளில் ஆண்களுக்கு 95 வார்டுகளும், பெண்களுக்கு 105 வார்டுகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

இதில் பொதுப்பிரிவினர், பொதுப்பிரிவு பெண்கள், தாழ்த்தப்பட்டவர்கள், அந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் என பிரித்து வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. பழங்குடியினருக்கு என்று வார்டுகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 89 வார்டு எண்கள் விவரம் வருமாறு:-

வார்டு 2, 8, 9, 11, 12, 13, 14, 15, 19, 20, 25, 26, 29, 30, 33, 34, 39, 42, 43, 44, 48, 49, 50, 51, 58, 61, 67, 68, 69, 75, 76, 79, 81, 83, 87, 88, 91, 93, 95, 96, 97, 98, 100, 101, 102, 103, 113, 118, 119, 122, 123, 125, 126, 128, 131, 132, 134, 136, 139, 140, 146, 147, 149, 150, 151, 152, 153, 158, 160, 161, 164, 167, 170, 171, 173, 174, 175, 179, 180, 183, 185, 186, 187, 188, 191, 192, 193, 194, 197.

தாழ்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள் :

வார்டு 3, 16, 18, 21, 22, 24, 31, 45, 62, 72, 73, 99, 108, 117, 144, 200.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 16 வார்டுகள்:

17, 28, 46, 47, 52, 53, 59, 70, 74, 77, 85, 111, 120, 135, 159, 196.

மீதமுள்ள 79 வார்டுகள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள இணையதள முகவரியை கிளிக் செய்து முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்…

http://www.chennaicorporation.gov.in/images/ward_details.pdf

மேலும், தமிழக அரசின் அரசாணையில்,  அதாவது, உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும்,  தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடி யினருக்கு, அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

இந்த ஒதுக்கீடானது, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மாற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14 மாநகராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் 14 மேயர் பதவிகளும் அடங்கும்.

இதேபோல், 122 நகராட்சிகளில் 3500-க்கும் மேற்பட்ட வார்டு கவுன்சிலர் பதவிகளும், 122 தலைவர் பதவிகளும் உள்ளன.

மேலும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டு கவுன்சிலர் பதிவுகளும், 528 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 31 மாவட்ட ஊராட்சிகளில் 655 வார்டு கவுன்சிலர் பதவிகள் உள்ளன.

388 ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 கவுன்சிலர் பதவிகளும், 388 தலைவர் பதவிகளும் இருக்கின்றன. 12,524 ஊராட்சிகளில் 99,324 கவுன்சிலர் பதவிகளும், 12,524 தலைவர் பதவிகளும் உள்ளன.

பதவிகள் அடிப்படையில், தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்கள்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்ற 6 வகையாக பிரித்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இதன்படி எந்தெந்த வார்டுகளில் யார்-யார் போட்டியிடலாம் என்பது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. இதில் பெண்களுக்கு 33 வார்டுகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சேலம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.