லண்டன்: 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் சிறந்த சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற கருத்து பொய்யாகி வருகிறது.

இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா

இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இங்கிலாந்து எடுத்த 311 ரன்களை விரட்டிய தென்னாப்பிரிக்கா, போராட்டமே இல்லாமல் வெறும் 207 ரன்களுக்கு சரணடைந்தது. 311 ரன்கள் என்பது எளிதாக எட்டக்கூடிய இலக்குதான்.

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள்

இதில் பாகிஸ்தானின் பேட்டிங் பெரிய அபத்தம். கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்படும் பாகிஸ்தான் முதலில் பேட் செய்து, வெறும் 105 ரன்களுக்கு சுருண்டது. ஷாட்பிட்ச் பந்துகளைக் கண்டு அரண்டது.

நியூசிலாந்து – இலங்கை

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, வெறும் 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மேற்கண்ட 3 போட்டிகளை ஒப்பிடுகையில், ஆஸ்திரேலியா – ஆஃப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையே நடந்த ஆட்டம் பரவாயில்லை எனலாம். வலுவான பழைய அணிகளான பாகிஸ்தான், இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவை மோசமாக சொதப்பிய நிலையில், இளம் மற்றும் புதிய அணியான ஆஃப்கானிஸ்தான், வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடி 207 ரன்களை எடுத்தது பாராட்டுக்குரிய விஷயமே.

ஆஸ்திரேலியாவும் அந்த ரன்களை சேஸ் செய்ய, கிட்டத்தட்ட 35 ஓவர்களை எடுத்துக்கொண்டதோடு, 3 விக்கெட்டுகளையும் இழந்தது. எனவே, அந்தளவிற்கு ஆஃப்கானிஸ்தான் டஃப் கொடுத்தது எனலாம்.

பார்ப்போம்….இனிவரும் நாட்களிலாவது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய அணிகள் நன்றாக விளையாடுமா? என்று.