புதுடெல்லி:
அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டம் விரிவுபடுத்துவது என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தபிறகு முதல் கேபினட் அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் நடந்தது.
2 ஏக்கருக்கு குறைவான நிலம் இருந்தால் மட்டுமே இந்த நிதியுதவி பெற முடியும் என்ற நிபந்தனை இனி கிடையாது. அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் வங்கியில் செலுத்தப்படும் என மத்திய கேபினர் கூட்டத்தில் முதல் முடிவு எடுக்கப்பட்டது.
சிறு, நடுத்தர விவசாயிகளுக்கு பென்ஷன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கிரெடிட் கார்டு மூலம் ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் பெற முடியும்.
அனைத்து விவசாயிகளுக்கும் ரூ. 6 ஆயிரம் வழங்கும் பிரதமரின் விவசாயி திட்டத்தை விரிவுபடுத்துவோம் என பாஜக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
அதனை தற்போது நிறைவேற்றியிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்ல விலை மற்றும் கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் போராடி வந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டு, பண்ணை வருமானத்தை உயர்த்த புதிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.