புதுடெல்லி:
கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை இல்லா திண்டாட்ட விகிதம் 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது.
மத்திய கேபினட் பொறுப்பேற்றுக் கொண்ட அன்று மத்திய தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நகர்ப்புற இளைஞர்கள் 7.8 சதவீதம் பேர் வேலை இழந்துள்ளனர். கிராமப்புறங்களில் 5.3 சதவீதத்தினர் வேலை இழந்துள்ளனர்.
கடந்த 2017-18-ம் ஆண்டில் வேலை இல்லா திண்டாட்டம் 6.1 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் இது அதிகமாகும்.
இந்தியாவில் 6.2 சதவீத ஆண்களும், 5.7 சதவீத பெண்களும் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.