லண்டன்:
மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ளமுடியாமல் 21.4 ஓவர்களில் 105 ரன்களுக்குள் பாகிஸ்தான் சுருண்டது. 2 மணி நேரத்தில் ஆட்டமே முடிந்தது.
டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹோல்டர், முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார்.
பந்துகளை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர். சொல்லி வைத்தாற்போல் வரிசையாக அவுட் ஆக தொடங்கினர்.
இங்கிலாந்து ஆடுதளத்தின் தன்மையை புரிந்து கொண்ட மேற்கு இந்திய தீவுகள் பந்து வீச்சாளர்கள் ஹோல்டர், தாமஸ், காட்ரல், பவுன்ஸரோடு சேர்த்து வேகப்பந்து வீசீனர்.
கிரீஸுக்குள் நின்று அங்கும் இங்கும் குதிக்கத் தொடங்கினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள்.
மேற்கு இந்திய தீவுகளின் ஒஷேன் தாமஸ் 54 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து, அதிகபட்சமாக 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
ஜேசன் ஹோல்டர் 18 ரன்களுக்கு 3 விக்கெட்களையும், கோல்டன் ஆர்ம் ஆந்த்ரே ரஸல் 3 விக்கெட்களையும், ஓவர்களில், ஒரு மெய்டன் ஓவர் போட்டு, 4 ரன்களை கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பகார் ஜமான் 2 பவுண்டரிகள் 1 சிக்ஸர் அடித்து விளாசிக் கொண்டிருந்தபோது, காட்ரெல் வீசிய பந்தை இமாம் உல் ஹக் லெக் திசை நோக்கி திருப்பியபோது விக்கெட் கீப்பரிடம் கேச் ஆகி அவுட் ஆனார்.
பகார் ஜமான் 22 ரன்களில் ஆந்த்ரே ரஸஸின் பவுன்சரை புல் ஆட முயன்று பந்து ஹெல்மெட்டின் கிரில்லில் பட்டு எட்ஜாகி அவுட் ஆனார்.
தாமஸின் அவுட்ஸ் விங்கரை பாபர் ஆஸம் அன் ஆகி பாபர் ஆஸம் விக்கெட் கீப்பரிடம் கேச் அவுட் ஆனார்.
ஹோல்டர் பந்தை சர்பராஸ் அகமது அடிக்க, விக்கெட் கீப்பரின் கைகளில் பந்து சிக்கியது. சர்பராஸ் வெளியேறினார். ரிவியூவில் அவுட் என உறுதியானது.
இமாம் வாசிம், ஹசன் அலி ஆகியோர் ஹோல்டர் பந்துவீச்சில் அவுட்டானார்கள். சதாப் கானை தாமஸ் அவுட் ஆக்கினார்.
ஹபீஸ் 16 ரன்களில் தாமஸ் பவுன்சருக்கு கேச் ஆனார். இறுதியாக வஹாப் ரியாஸ் 1 பவுண்டரி, 2 சிக்ஸர் என அடித்து விளையாட,கடைசியில் போல்டு ஆனார்.
22.4 ஓவர்களில் 105 ரன்கள் மட்டுமே எடுத்து பாகிஸ்தான் சுருண்டது. இறுதியில் பாகிஸ்தானை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றது.