அலங்காநல்லூரில் ஆசை வார்த்தைகள் கூறி, சிறுமியை கற்பழித்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகிலுள்ள கல்லாணை கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் வீரபாண்டி. இவர் சம்பவத்தன்று இரவு ராஜீவ்காந்தி தெருவில் வசிக்கும் அத்தை வீட்டுக்கு சென்றார். அங்கு அத்தை மகள் மட்டும் தனியாக இருந்தார். அவரிடம் உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த சிறுமியை வீரபாண்டி கற்பழித்தார்.

இது தொடர்பாக சிறுமியின் தாயார் சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கற்பழித்த வீரபாண்டி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.

இதற்கு உடந்தையாக இருந்ததாக வாலிபரின் தாயார் கலாதேவி உறவினர் அங்குசாமி (63) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

[youtube-feed feed=1]