ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோவில் சென்ற விவசாயி ஒருவர், வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சமுதாயம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். சூளமேனி அருகே செங்கரையில் உள்ள காட்டு செல்லி அம்மன் கோவிலுக்கு செல்ல ஊத்துக்கோட்டை வந்த சுப்பிரமணி, அங்கிருந்து புறப்பட்ட ஆட்டோவில் ஏறி, சூளமேனி கிராம எல்லை வழியாக சென்று கொண்டிருந்த போது ஆட்டோவிலிருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் அனுமந்து விசாரணை நடத்தி வருகிறார். இது குறித்து ஆந்திராவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

[youtube-feed feed=1]