லண்டன்:

100வயதானவர்களை  கவுரவிக்கும் வகையில் தபால்தலை வெளியிட்டு கவுரவித்து வருகிறது பார்படோஸ் நகரம். இவ்வாறு தபால் தலை வெளியிடப்பட்டவர்களில் 114 பேர் தங்களது சொந்த தபால் தலையுடன் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது

பார்படாஸில் நீங்கள் 100 வயதை அடைந்தால், உங்கள் மரியாதைக்கு ஒரு முத்திரை கிடைக்கும். தற்பொழுது 114 பேர் தங்களது சொந்த தபால் தலைகளுடன் வாழ்கின்றனர்.­

தபால்தலை என்பது அஞ்சல் சேவைக்கு முன் கட்டணம் செலுத்தப்பட்டதற்குச் சான்றாக கொடுக்கப்படுவது. பொதுவாக இது ஒரு நீள்சதுர வடிவிலமைந்த சிறு காகிதத் துண்டாக இருக்கும். தபால் சேவை மூலம் அனுப்பப்படவுள்ள கடிதஉறையில், மேற்சொன்ன தபால்தலைகளை ஒட்டுவதன் மூலம், அக் கடிதத்தை அனுப்புபவர் அதை அனுப்புவதற்கான கட்டணத்தைச் செலுத்தியுள்ளார் என்பதற்குச் சான்றாக தபால்தலை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.

அஞ்சல்தலை என்ற சொல்லுக்குப் பதிலாக முத்திரை என்ற பதமும் வழக்கிலுள்ளது. இச் சொல் தபால்தலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தபால்தலைகள்  நீள் சதுரமாக மட்டுமன்றித் தபால்தலைகள் பல்வேறு வடிவங்களிலும் வெளியிடப்படுவதுண்டு. முக்கோணம், வட்டம், பல்கோணம், இணைகரம் போன்ற வடிவங்களிலும் தபால்தலைகள் உண்டு.