ஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் விடுத்துள்ள கோரிக்கையினை ஏற்று சீன அதிபர் ஜி ஜின்பிங்  ரஷ்யா செல்கிறார். இம்மாநாட்டில் கலந்துகொள்வதோடு இருதரப்பு  உறவுகளையும் மேம்படுத்திட உள்ளதாகவும் சீனாவின் துணை வெ ளியுறவுத்துறை  அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா நடத்தும்  செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு 1997ம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது. ஜூன் 6ம் தேதி முதல் 9 வரை   நடைபெறவுள்ள  இம்மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பார்வையாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும்  நடைபெற்று வரும் வர்த்தகப்போர் நிகழ்வின்போது சீன அதிபரின் ரஷ்ய வருகை சர்வ தேச அளவில் உற்று நோக்கப்படுகிறது.

23வது செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தின் பதினோராவது கூட்டத்தில், சீன ஜனாதிபதி மன்றத்தின் மிக நிறைவு அமர்வில் உரை ஒன்றை நிகழ்த்தினார், நீடித்த வளர்ச்சி பற்றிய சீனாவின் கருத்துக்களை விளக்கிக் கூறி, அனைத்து கட்சிகளுடன் இணைந்து வாதிடும் பன்முகத்தத்துவம் மற்றும் பூகோள ரீதியான அபிவிருத்திக்கான பூகோள ஆளுமையை மேம்படுத்தல்.

சீன அதிபரின் ரஷ்ய பயணம் விஜயம் சீன-ரஷ்ய உறவுகளின் அரசியல் அடித்தளத்தை  மேலும் ஒருங்கிணைக்கவும் சர்வதேச அளவில் ஏற்படும் பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆதரவளிப்பதை மீண்டும் உறுதிப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் நடைமுறை ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறக்கும், இது இருதரப்பு உறவுகளை ஒரு புதிய சகாப்தத்தில் நுழைய ஊக்குவிப்பதும், இரு நாடுகளின் வளர்ச்சிக்கும், உலக அமைதிக்கும், ஸ்திரத்தன்மைக்கும் அதிக பங்களிப்பை அளிக்கும் எனவும் சீன வெளியுறவு துறை அமைச்சர்  ஜாங் கூறினார்.

கடந்த வருடம் சீனா – ரஷ்யா வர்த்தகம் சுமார் 100 பில்லியன் கோடி நடைபெற்று இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினர்.

-செல்வமுரளி