புதுடெல்லி:

மத்திய கேபினட் அமைச்சராக பதவியேற்ற பிரதாப் சந்திர சாரங்கிக்கு பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்து பாராட்டினர்.


ஒடிசாவைச் சேர்ந்த பிரதாப் சந்தி சாரங்கி மத்திய அமைச்சராக வியாழன்று பதவியேற்றார்.
எளிமையான அவரை, ஒடிசாவின் மோடி என்றே அழைக்கின்றனர். மலைவாழ் மக்களுக்கு பள்ளிகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்.

ஆர்எஸ்எஸ் பற்றாளரான இவர், ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து சாமியாராக நினைத்தார்.
ஆனால், அவரது கவனம் சமூக சேவையை நோக்கி திரும்பியது. சமூக வலைதளங்களில் பலரால் கொண்டாடப்பட்
டு வந்தார்.

ஒடிசாவில் 2 முறை பாஜக எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். தற்போது பலசோர் மக்களவை தொகுதியில் பிஜு ஜனதா தள வேட்பாளரும், இதே தொகுதியில் எம்பியாக இருந்தவருமான உமர் ஜெனாவை தோற்கடித்தார்.

இவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தபோது, அங்கிருந்த பார்வையாளர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவர், மூங்கிலால் ஆன சாதாரண வீட்டில் வசிக்கிறார்.

அமைச்சராக பதவியேற்ற பிரதாப் சந்திர சாரங்கிக்கு