பெங்களூரு:

ர்நாடக மாநிலத்தில் காவலர் ஒருவர் தனது லத்தியை புல்லாங்குழலாக மாற்றி அழகாக வாசிக்கும் இசை வீடியோ வைரலாகி வருகிறது. இதுவரை 8ஆயிரம் லைக்குகளை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது.

காவலர்களுக்கு சட்டம் ஒழுங்கை கவனிக்க லத்தி வழங்கப்படுவது வழக்கம். இந்த லத்திகள் பெரும்பாலும் மூங்கில் கம்புகளாலேயே உருவாக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போதைய நவீன காலத்தில், பைபர் பிளாஸ்டிக்கிலான லத்திகளே வழங்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநில ஹுப்ளி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் சந்திரகாந்த்  ஹுட்கி. இவருக்கு வழங்கப்பட்ட பைபர் லத்தியை, இசை கருவியான புல்லாங்குழ லாகி மாற்றி அழகாக இசை அமைத்து வருகிறார்.

இதுதொடர்பாபக  காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளரான பாஸ்கர ராவ்,  தலைமை காவலர் வாசிக்கும் புல்லாங்குழல் இசை தொடர்பான வீடியோவை பதிவிட்டு உள்ளார். அதில்,  ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் லத்தியைக்கொண்டு புல்லாங்குழல் வாசிக்கிறார். அந்த முரட்டு லத்தியிலி ருந்து இனிமையான புல்லாங்குழல் இசை வெளிப்படுகிறது என்று தெரித்து உள்ளார். .இவரைக் கண்டு நாங்கள் பெருமைகொள்கிறோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் ஏராளமான லைக்குகளை வாங்கி வைரலாகி வருகிறது.

பாஸ்கர் ராவ் என்ற ஐபிஎஸ் அதிகாரி தனது டிவிட்டர் பதிவிட்டு வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.