சென்னை:

ண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள்முறை கேட்டில் சுமார் 60 சதவிகிதம் மாணவர்கள்  வெளிநாடு வாழ் மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் தேர்வு பெறாமலேயே லட்சக்கணக்கில்  பணம் கொடுத்து தேர்ச்சி பெற்றுள்ளது அம்பலமாகி உள்ளது.

அண்ணா பல்கலைக்கழக தேர்வுதாள் திருத்தம் முறைகேடு, மற்றும் மறுதேர்வு, மறுகூட்டல் போன்றவற்றிலும் மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில், அண்ணா பல்கலைக்கழக  தேர்வுக்கட்டுப் பாட்டு அலுவலர் உமா உள்பட  37 தற்காலிக பேராசிரியர்கள் உள்பட மொத்தம் 39  பேராசிரியர் களை அண்ணா பல்கலைக் கழகம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், அண்ணா பல்கலைக் கழகத்தில் நடத்தப்படும் படிப்புகள், வளாகத் தில் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் படிக்கும் வெளிநாடு  வாழ்  மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதில் பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது தற்போது வெளியில் வந்துள்ளது. சுமார் 60 சதவிகிதம் வெளிநாடு  வாழ்  மாணவர்களின் தேர்வில் இந்த ஊழல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இது தொடர்பா பல்கலைக கழகம் நடத்திய விசாரணையில் தேர்வுக் கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி உள்பட 4 பேராசிரியர்கள் பல லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வெளிநாடு வாழ் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்  போட்டுள்ளது தெரியவந்துள்ளது. சுமார் 60 சதவிகிதம் பேர், இவ்வாறு முறைகேடு செய்து  கடந்த 2016, 2017, 2018ம் ஆண்டு செமஸ்டர் தேர்வு, அரியர் தேர்வுகளை எழுதிய வெளி நாடு வாழ் மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் போடுவதாக கூறி ஒரு பாடத்துக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.1  லட்சம் வரை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்களே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையின்போது,  அண்ணா பல்கலைக் கழகத்தில் தங்கி படிக்கும் வெளி நாடு வாழ் மாணவர்கள் பெரும்பாலும் வகுப்புகளுக்கு வருவதில்லை என்றும், பலர் வெளிநாட்டில் இருந்தபடியே இங்கு வந்து தேர்வு எழுதியதும் தெரியவந்துள்ளது. இதற்காக அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து தங்களது தேர்வுதாளை தேர்ச்சி பெற வைத்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.

இந்த முறைகேட்டில் தேர்வுக் கட்டுப்பாட்டுத்துறையை சேர்ந்த ஒரு அலுவலருடன் இணைந்து பேராசிரியர்கள் இந்த முறைகேட்டை செய்துள்ளனர்.  இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.