டில்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வது, தற்கொலைக்கு சமமானது என்று டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக மூத்த தலைவர்கள் மீது கடுமையாக குற்றம் சாட்டிய ராகுல்காந்தி, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.

ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் காரிய கமிட்டி மறுத்துவிட்ட நிலையில், ராகுல் தனது நிலையில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ராகுலின் சகோதரி, பிரியங்கா உள்பட  பல தலைவர்கள் ராகுலை சமாதானப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ், ராகுலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிவிட் பதிவிட்டுள்ளர்.

அதில், “ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்து  தற்கொலைக்கு சமமானது. பாஜகவுக்கு எதிராக ஒரு தேசிய ஒருங்கிணைப்பை எதிர்க்கட்சிகள்  உருவாக்க தவறி விட்டது, ஒரு குறிப்பிட்ட தேர்தலின் விளைவாக, இந்தியாவைப் போலவே ஒரு நாடு வேறுபட்ட மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பாணியிலான உண்மை அல்ல.

நேரு குடும்பத்தை தவிர வேறு யாராவது ஒருவர் கட்சிக்கு தலைவராக நியமிக்கப்பட்டால் அவரை ராகுல்காந்தி, சோனியா காந்தியின் ரிமோட் மூலம் இயங்கும் பொம்மையாக நரேந்திர மோடி, அமித்ஷா படை சித்தரிக்கும். ராகுல் காந்தி ஏன் தனது அரசியல் எதிரிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.