மோச்சே, பெரு
ஒரு சிறுவன தெரு விளக்கில் படிப்பதை கண்ட செல்வந்தர் அவருடைய கல்விக்கு உதவி செய்துள்ளார்.
பஹ்ரைன் நாட்டை சேர்ந்த பெரும் செல்வந்தர் யாகூப் யூசுஃப் அகமது முபாரக் என்பவர் பெரு நாட்டில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். தற்போது 31 வயதாகும் முபாரக் பெரும் கொடையாளர் ஆவார். வறுமையில் வாடும் பலருக்கு அவர் தக்க சமயத்தில் உதவிகளை அளித்துள்ளார்.
பெரு நாட்டின் மோச்சே மாவட்டத்தில் அவர் சுற்றுப் பயணம் செய்த போது தெரு விளக்கில் ஒரு சிறுவன் பாடங்களை படித்தபடி இருப்பதை கண்டு அதிர்ந்தார். அவர் அந்த சிறுவனை அழைத்து இது பற்றி விசாரித்தார். அந்த 12 வயது சிறுவனின் பெயர் விக்டர் மாரிடின் அங்குலோ கார்டோபோ என்பதாகும்.
விக்டர் மிகவும் வறுமையில் வாடி வருகிறார். அவருடைய வீட்டில் மின்சாரக் கட்டணம் செலுத்த பணம் இல்லாத்தால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள்து. ஆயினும் கல்வி மேல் ஆர்வம் கொண்ட விக்டர் அருகில் உள்ள தெருவிளக்கின் கீழ் அமர்ந்து தனது பாடங்களை படித்து வந்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த முபாரக் உடனடியாக அவரது வீட்டு மின் கட்டணத்தை செலுத்தி மீண்டும் மின் இணைப்பை அளித்துள்ளார். அத்துடன் அவருக்கும் வேறு சில மாண்வர்களுக்கும் பள்ளியின் கல்விக் கட்டணத்தையும் அளித்துள்ளார். அப்போது அவர் தாமும் சிறு வயதில் கல்விக்காக மிகவும் துயருற்றதால் இந்த உதவியை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு விக்டர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமக்கு மட்டுமின்றி தமது பள்ளி மாணவர்கள் பலருக்கும் கல்விக்காக உதவி செய்த முபாரக்குக்கு தாம் என்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார். இந்த செய்தி சமூகவலை தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.
விக்டரின் வீட்டை பராமரிக்க பண உதவி செய்யவும் பலர் முன் வந்துள்ளனர்.