டில்லி:
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அங்கு அதிக அளவிலான வாக்குகளை பெற்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்துள்ளார்.
17வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட்டார். இதில், அமேதியில் தோல்வி அடைந்துள்ள நிலையில், வயநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க அளவில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, தன்னை எம்.பி.யாக தேர்ந்தெடுக்க மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில், “தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற உதவிய கேரள மக்களுக்கும் நன்றி” என தெரிவித்து உள்ளார்.