அதிமுக, அமமுக, திமுக என்று கட்சிகள் மாறி, தற்போது திமுகவில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி தொகுதியில் மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அங்கு பெருவாரியான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.
தமிழகத்தில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக 14 தொகுதிகளிலும், அதிமுக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜி 21896 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கே உள்ள அதிமுக வேட்பாளர் 15089 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.
தற்போதைய நிலவரப்படி,சுமார் 6807 வாக்கு வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்துள்ளார்.
அரவக்குறிச்சியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டார். அவரை எதிர்த்து, அதிமுக சார்பில் வி.வி.செந்தில் நாதன் போட்டியிட்டார். மேலும், அமமுக சார்பில் சாகுல் ஹமீது, நாம் தமிழர் கட்சி சார்பில் பா.க. செல்வம், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மோகன்ராஜ் ஆகியோர் உள்பட மொத்தம் 64 பேர் களத்தில் நின்றனர்.

செந்தில் பாலாஜி கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் , டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அவரது பதவி பறிக்கப்பட்ட நிலையில், பின்னர் திமுகவில் இணைந்தார். அதன் காரணமாக அவருக்கு திமுக அரவக்குறிச்சி தொகுதியை ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]