சென்னை:
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23ந்தேதி (நாளை மறுதினம்) காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
17வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் அடைக்க வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், தற்போது நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால், அன்றைய தினமும் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 23-ந்தேதி காலை 10 மணி முதல் இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாஹு உத்தரவிட்டு உள்ளார்.