மதுரை:

மிழகத்தில் பொறியியல் படிப்பு மீதான மோகம் மாணவ மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களிடமும் குறைந்து வருவதால், பெரும்பாலான மாணவ மாணவிகள் பட்டப்படிப்பு விரும்பி ஆர்ட்ஸ் காலேஜ் எனப்படும் கலை அறிவியல் கல்லூரிகளையே நாடி வருகின்றனர்.

இதன் காரணமாக பல கல்லூரிகள் தங்களுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி பல்கலைக்கழகங்களின் கதவை தட்டி வருகின்றன.

மதுரை பல்கலைக்கழகம்

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் ஏராளமானோர் இடம் கேட்டு விண்ணப்பம் செய்திருப்பதால், கல்லூரி நிர்வாகங்கள் மதுரையில் உள்ள  காமராஜ் பல்கலைக்கழங்களுக்கு கடிதம் எழுதி, மேலும் இடம் ஒதுக்ககோரி மனு செய்துள்ளனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் 11 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 27 தன்னாட்சி கல்லூரிகள், 6 பல்கலை. உறுப்புக் கல்லூரிகள், 50 சுயநிதி கல்லூரிகள் உட்பட 115 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் பிஏ, பி.காம், பிசிஏ போன்ற பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  கல்லூரிகளில் பொதுவாக ஆய்வகம் இல்லாத பாடப் பிரிவான பிகாம் படிப்புக்கு  60 பேரும், ஆய்வகத்துடன் கூடிய பாடப்பிரிவுகளில் 40 மாணவர்களும் சேர்க்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த முறை ஏராளமான விண்ணபங்கள் குவிந்துள்ளதால், தங்களுக்கு மேலும் இடம் ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்விமீதான மோகம் குறைந்து வரும் நிலையில், கலை, அறிவியல் கல்லூரி களில் சேர மாணவர்கள்ஆர்வம் காட்டுகின்றனர். அதிக மதிப்பெண் பெற்றவர்களைக்கூட கலை, அறிவியல் பிரிவுகளில் இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், புதிய புதிய கலை, அறிவியல் படிப்புகளைத் தொடங்க அனுமதி கோரி சென்னைப் பல்கலைக் கழகத்தில் 45 கல்லூரிகள் விண்ணப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது.