துபாயிலிருந்து திருச்சி வந்த விமானத்தில் கடத்தப்பட்டு வந்த 555 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
துபாயில் இருந்து திருச்சி விமானத்தில் ஸ்ரீதம்ஜித் அசாருதீன், யாசர் அராபத் ஆகிய இருவரும் பயணித்து, திருச்சி விமான நிலையம் வந்துள்ளனர். ஏற்கனவே துபாயிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், அசாருதீன் மற்றும் யாசர் அராபத்திடமிருந்து 555 கிராம் எடை அளவு கொண்ட தங்கத்தை சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். மேலும், இவருவரையும் கைது செய்துள்ள அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.