
தாய்பே: ஒரு பாலின திருமணத்தை, ஆசியாவின் முதல் நாடாக அங்கீகாரம் செய்துள்ளது குட்டித் தீவு நாடான தைவான்.
அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பின் மூலமாக அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கு முன்னதாக, ஒரு பாலின திருமணத்தை ஆதரித்த அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம், இதுதொடர்பாக ஒருமித்த இசைவுடன் சட்டம் கொண்டுவர, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு 2 ஆண்டுகள் கால அவகாசத்தை வழங்கியிருந்தது.
ஆனால், நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் நிறைவேறுவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. வலதுசாரிகள் இதை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில், மூன்று விதமான மசோதாக்கள் விவாதிக்கப்பட்டு, அதில் ஒரு பாலின திருமணத்திற்கு ஆதரவளிக்கும் மசோதா சட்டமாக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்குள் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு பாலின திருமண ஆதரவாளர்கள், வெளியே நின்று ஆதரவு கோஷமிட்டபடியே இருந்தனர்.
[youtube-feed feed=1]