கரூர் அருகே சாலையில் சென்றுக்கொண்டிருந்த காரும், வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 5 பேர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் பகுதியில் இருந்து முசிறி நோக்கி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தனது குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றுக்கொண்டிருந்தார். அதே சாலையில் வேன் ஒன்று கிருஷ்ணராயபுரம் பகுதிக்கு வந்துக்கொண்டிருந்தது. பொய்யாபுத்தூர் பெட்ரோல் பங்க் அருகே, பெட்ரோல் போடுவதற்காக காரை திருப்பும்போது, எதிரே வைத்துக்கொண்டிருந்த வேன் மீது, கார் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவலர்கள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.