சென்னை:
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன், தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் திடீர் ஆலோசனை நடத்தினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் வரும் 19ந்தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதையடுத்து 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கமலின் இந்த தீவிரவாதம் குறித்த பேச்சு சர்ச்சையாக பல இடங்களில் மோதல் நடைபெறும் சூழல் உருவாகி வரும் நிலையில், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு, மற்றும் சமூக வலைதளங்களின் செயல்பாடு குறித்து , தலைமை செயலாளர் கிரிஷாவுடன் சென்னையில் டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் விஸ்வநாதன் உள்பட மூத்த அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.