சென்னை:
தமிழகத்தில் பிஎட் மற்றும் டெட் தேர்வு ஒரே நாளில் ஜூன் 8ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், பிஎட் தேர்வு ஜூன் 13ந்தேதிக்கு மாற்றப் படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல அரசு தேர்வுகள், தேதிகள் மாற்றி அறிவிக்கப்பட்டன. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வான டெட் தேர்வும், பிஎட் தேர்வு தேதியும் ஜூன் 8ந்தேதி என அறிவிக்கப் பட்டது.
ஒரே நாளில் 2 தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டதால், தேர்வை எதிர்கொள்ள இருந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். பிஎட் தேர்வை மாற்றி அமைக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில், ஜூன் 8ம் தேதி நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.