மும்பை

மும்பை 26/11 தாக்குதல் குறித்த நடிகர் ரிதீஷ் தேஷ்முக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

 

பொதுவாக தீவிரவாத தாக்குதல்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது அனைத்து நாடுகளிலும் வழக்கமாகும். தற்போது இந்தியாவில் கடைவீதிகள், திரை அரங்குகள், உள்ளூர் ரெயில்கள், மற்றும் விடுதிகளில் குண்டு வெடிப்பது அதிகரித்து வருகிறது. இவ்வாறான ஒவ்வொரு தாக்குதல் நேரத்திலும் மக்கள் அரசை குறை கூறுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

கடந்த 2008 ஆம் வருடம் நவம்பர் மாதம் 26 முதல் 29 வரை இந்தியாவின் வர்த்தக நகரங்களில் முதல் இடத்தில் உள்ள மும்பை நகர் தீவிரவாதிகள் தாக்குதலால் நிலை குலைந்தது. இந்த தாக்குதல் குறித்து இதை நடத்திய லஷ்கர் ஈ தொய்பா மீது மட்டுமின்றி அப்போதைய அரசு மீதும் மக்களுக்கு கடுமையான கோபம் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்ட போது அந்த இடத்துக்கு வர மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடில் தமக்கு பொறுத்தமான உடையை தேடிக் கொண்டிருந்தார். இந்த தாக்குதல் முடிந்த பிறகு அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அந்த இடங்களை பார்வையிடன் தனது மகனும் நடிகருமான ரிதிஷ் தேஷ்முக் மற்றும் பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவை அழைத்து வந்தார்

இந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் அப்போதைய முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் தனது மகனை வைத்து ராம் கோபால் வர்மா இயக்கத்தில் திரைப்படம் உருவாக தாக்குதல் நடைபெற்ற இடத்துக்கு அழைத்து வந்ததாஅகவும் தாக்குதல் நடந்த நேரத்தில் ரிதீஷ் அந்த வளாகத்தில் இருந்ததாகவும் கூறிஉள்ளார்.

இதற்கு ரிதீஷ் தேஷ் முக் அளித்த டிவிட்டர் பதிலில், “நான் எனது தந்தையுடன் குண்டு வெடிப்பு ந்டந்த தாஜ் மற்றும் ஒபராய் விடுதிகளுக்கு சென்றது உண்மை ஆகும். ஆனால் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கி சூடு ந்டந்த சமயத்தில் நான் அந்த வளாகத்தில் இல்லை. அத்துடன் அவர் எனக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்க இயக்குனரை அழைத்து வந்ததாக சொன்னது தவறான தகவலாகும்.

அவர் உயிருடன் இருந்தவரை எனக்கு வாய்ப்புக் கோரி எந்த ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பாளருக்கு சிபாரிசு செய்ததில்லை என்பது எனக்கு ஒரு பெருமை ஆகும். நீங்கள் ஒரு முதல்வரை கேள்வி கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் தற்போது உயிருடன் இல்லாததால் பதில் அளிக்க முடியாதவரை கேள்விகள் கேட்பது தவறானதாகும். இந்த கேள்விகள் எழுப்ப ஏழு வருடங்கள் தாமதம் ஆகி உள்ளது” என பதிந்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் விலாஸ்ராவ் தேஷ்முக் கடந்த 2012 ஆம் வருடம் மரணம் அடைந்தார். அதனால் அவரால் பதில் சொல்ல முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறோம். அதைப் போல் ஒரு மகனாக ரிதீஷ் தேஷ்முக் கூறுவது சரியாகும். ஆனால் பல மகன்கள் அவர்களது தந்தைகளை இந்த விபத்தில் இழந்துள்ளனர். அவர்கள் துயரத்துக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு தீவிரவாதத்தை தடுக்காதோர் தீவிரவாதத்துக்கு துணை போவதாக பொருள் கொள்ளலாம். தற்போது ரிதிஷ் தேஷ்முக் அளித்த பதிலால் அவர் தந்தை தீவிரவாதத்துக்கு துணை போனார் என்பது போல் பொருள் ஆகிறது. அத்துடன் அவர் தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட தனது நடிகர் மகனையும் பாலிவுட் இயக்குனரையும் அழைத்துச் சென்றது மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது மறுக்கமுடியாத உண்மை ஆகும்” என்றார்.