சென்னை:
திமுக எம்பி. ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் நகை பறிக்க முயற்சி நடந்தது.
சென்னை ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி வீடு உள்ளது. ஆட்கள் நடமாட்டம் உள்ள இந்த பகுதி இது.
திமுக எம்பி ஆர்எஸ்.பாரதியின் மனைவி சம்பூர்ணம், வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்தவர்கள் செயினை பறிக்க முயற்சி செய்தனர். செயினை பறிக்க விடாமல் சம்பூர்ணம் தடுத்தார்.
செயினை பறிக்க முடியாததால், பைக்கில் வந்தவர்கள் தப்பியோடினர்.
சம்பூர்ணம் அளித்த புகாரின் பேரில் ஆதம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.