சென்னை:
மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்து உள்ளார்.
தற்போது நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில், 6வது மற்றும் 7வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற வேண்டியதுள்ளது. அதையடுத்து மே 23ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவை அரசியல் கட்சிகள் ஆவலோடு எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து காத்துக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், மே 23-க்கு பிறகு ரஜினி அரசியல் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் ரஜினியின் சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்து உள்ளார்.
கடந்த சிலஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி, தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறினார். தொடர்ந்து விரைவில் கட்சி பெயரை அறிவித்து தேர்தல் களத்தில் புகுவார் என்று எதிர்பார்த்தால்… நேரம் வரட்டும்… காலம் வரட்டும் என்று இழுத்தடித்து வருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர், அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவேன் என்று தெரிவித்திருந்தார். தனது அரசியல் குறித்து, மே மாதம் 23-ம் தேதி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதாகவும் சொல்லி இருந்தார்.
ரஜினியின் முடிவை உறுதிப்படுத்தும் வகையில், அவரது அண்ணன் சத்தியநாராயணராவ், ரஜினி 23ந்தேதிக்கு பிறகு அரசியல் குறித்து முக்கிய முடிவை அறிவிப்பார் என்று கூறி உள்ளார்.