சென்னை:
தமிழகத்தில் முறைகேடு புகார் காரணமாக 13 வாக்குச்சாவடிகளில் மே 19ந்தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், அந்த 13 வாக்குச்சாவடிகள் எவை என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வன்முறை காரணமாக மறு வாக்குப்பதிவு நடத்த அரசியல் கட்சிகள் கோரியிருந்த நிலையில், நேற்று மாலை 13 வாக்குச்சாவடிகளுக்கு மறு தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார்.
அதன்படி, தருமபுரி, தேனி உள்ளிட்ட தொகுதிகளில் உள்ள 13 ஓட்டுச்சாவடிகளில் கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் வரும் மே 19ம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தருமபுரி தொகுதிகள் உள்ள 8 வாக்குச்சாவடிகள் விவரம்
தர்மபுரி அய்யம்பட்டியில் 181, 182ம் எண் வாக்குச்சாவடி மற்றும் நத்தமேடு 192,193,194, 195, 196, 197ம் எண் வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு.
தேனி தொகுதியில், ஆண்டிப்பட்டி பாலசமுத்திரத்தில் 67ம் எண் வாக்குச்சாவடி, மற்றும் பெரியகுளம் வடுகபட்டியில் 197ம் எண் வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு
திருவள்ளூர் தொகுதியில், பூந்தமல்லி மேட்டுப்பாளையத்தில் 195ம் எண் வாக்குச்சாவடி,
கடலூர் தொகுதியில் பண்ருட்டி திருவாதிக்கல் 210ம் எண் வாக்குச்சாவடி
ஈரோடு தொகுதியில் காங்கேயம் திருமங்கலத்தில் 248ம் எண் வாக்குச்சாவடி
காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.