
மீரட்: ஒரு மாதம் விடுப்பில் சென்ற தம்முடன் பணியாற்றிய ஒரு காவலர், அதைத் தொடர்ந்து மீண்டும் பணிக்கு திரும்பவில்லை என்பதைக் கண்டறிய உத்திரப்பிரதேச போலீசுக்கு 5 மாதங்கள் தேவைப்பட்டுள்ளன.
கன்வர் பால் சிங் என்ற அந்த 55 வயதுடைய காவலர், கடந்த 1987ம் ஆண்டு நடந்த மீரட் கலவரத்தின்போது, 42 முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற வழக்கில், இதர பல ஜவான்களுடன் சேர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்.
கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் உள்ளிட்ட தண்டனை வழங்கப்பட்ட அனைவரும் சரணடைய வேண்டுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதற்கு ஒரு வாரம் முன்பாகத்தான், ஒருமாத கால விடுப்பில் சென்றுள்ளார் கன்வர் பால் சிங்.
இந்த விபரங்கள் யாவும் சக காவலர்களுக்கு தெரியவேயில்லை. விடுமுறை முடிந்தும் பணிக்கு திரும்பாத காரணத்திற்காக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
கடைசியில் மிக தாமதமாகத்தான் விபரம் தெரிந்து, தற்போது துறைரீதியிலான விசாரணை முடிவில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணை தொடங்கியுள்ளது.
[youtube-feed feed=1]