டில்லி:

5வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

இன்றைய வாக்குபதிவு சராசரியாக 62.87 சதவிகிதம்  பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், ஜம்மு காஷ்மீர்,  ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் உள்பட 7 மாநிலங்களை சேர்ந்த 51 தொகுதிகளுக்கு இன்று  வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்த தொகுதிகளில்  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணிக்கு முடிவடைந்தது.

அதன்படி சராசரியாக 62.87 சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநிலம் வாரியாக வாக்குப்பதிவு விவரம்…

பீகார் – 57.76 சதவிகிதம்

ஜம்மு காஷ்மீர் – அனந்தநாத்: 8.76, லடாக்: 63.76 சதவிகிதம்

ஜார்கண்ட் – 64.65  சதவிகிதம்

மத்திய பிரதேசம் – 65.56 சதவிகிதம்

ராஜஸ்தான் – 63.72 சதவிகிதம்

உத்தரபிரதேசம் – 57.93 சதவிகிதம்

மேற்கு வங்காளம் – 74.42 சதவிகிதம்