லிஃபோர்னியா

மெரிக்க தொலைக்காட்சியின் நடனப்போட்டியான ஓர்ல்ட் ஆஃப் டான்ஸ் நிகழ்வில் மும்பையின்புகழ்பெற்ற தி கிங்ஸ் நடனக்குழு முதல் பரிசு பெற்றுள்ளது.

மும்பையை சேர்ந்த புகழ்பெற்ற நடனக்குழுவான தி கிங்ஸ் என்னும் குழுவில் 14 நடனக்கலைஞர்கள் இடம் பெற்றுள்ளனர்.  இவர்கள் அனைவரும் 17 முதல் 27 வயது வரையிலான இளைஞர்கள் ஆவார்கள்.   இவர்கள் ஏற்கனவே 2008 முதல் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள்னர்.  கடந்த 2015 ஆம் வருடம் நடந்த உலக ஹிப் ஹாப் டான்ஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர்.

அமெரிக்க தொலைக்காட்சி நடத்தி வரும் நடனப் போட்டியான ஓர்ல்ட் ஆஃப் டான்ஸ் என்னும் போட்டியின் மூன்றாம் பாகம் தற்போது நடந்து வருகிறது.  இதில் ஜெனிஃபர் லோபஸ், நியோ, மற்றும் டெரக் ஹோ ஆகிய புகழ் பெற்ற நடனக்கலைஞர்கள் நீதிபதிகளாக உள்ளனர்.

இந்த போட்டியில் மும்பையின் தி கிங்ஸ் நடனக்குழு கலந்துக் கொண்டுள்ளது.   கடந்த பிப்ரவரி 29  முதல் நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்று  நேற்று நடந்தது.  இதில் தி கிங்ஸ் அணி முதல் பரிசை பெற்றுள்ளது.  இந்த அணியுடன் இறுதிச் சுற்றில் போட்டியிட்ட மற்றொரு அணி கலிஃபோர்னிஆவை சேர்ந்த யுனிடி லா ஆகும்.

வெற்றி பெற்ற தி கிங்ஸ் அணிக்கு பரிசாக 10 லட்சம் டாலர் பரிசுத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.   இது இந்திய மதிப்பில் ரூ.6.93 கோடி ஆகும்.