
2019 ஐபிஎல் தொடரின் குரூப் போட்டிகள் முடிவடையும் தருவாயில், புள்ளிப் பட்டியலில் சென்னை அணி இரண்டாமிடம் பிடித்துள்ளது.
தான் கேப்டனாகப் பொறுப்பேற்ற அனைத்து ஐபிஎல் தொடர்களிலும், தனது அணியை குறைந்தபட்சம் அரையிறுதி வரை அழைத்துச் சென்ற சாதனை கேப்டன் என்ற பெருமைக்குரியவராக இருக்கிறார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
இந்த 2019 ஐபிஎல் தொடரில், தோனி தொடர்பான சில சுவாரஸ்ய சம்பவங்களும் நடந்துள்ளன.
‘கேப்டன் கூல்’ என்று எப்போதுமே குறிப்பிடப்படும் தோனி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக நடந்த ஒரு போட்டியின்போது, தன் கட்டுப்பாட்டை இழந்து, மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் செய்த சம்பவமும் நடைபெற்றது.
இதுதவிர, ஐபிஎல் காலகட்டத்தில், விமான நிலையத்தில், இவர் சாதாரணமாக தரையில் படுத்து உறங்கிய சம்பவமும் நடந்தேறியது.
மேலும், டெல்லி அணிக்கெதிரான ஆட்டத்தின்போது, அந்த அணியின் கிரிஸ் மோரிஸை, மிகப் பிரமாதமான முறையில், ஜடேஜா பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்த சம்பவமும் முக்கியமானது.
எனவே, இந்தத் தொடரிலும் வழக்கம்போல தன் அணியை அரையிறுதிக்கு அழைத்துச் சென்ற கையோடு, பல சுவாரஸ்யங்களையும் நிகழ்த்தியுள்ளார் கேப்டன் கூல்..!