லக்னோ:
5-வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
உ.பி. மாநிலத்தில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சோனியா காந்தி போட்டியிடும், ரேபரேலி, அமேதியில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குகள் பதிவாகி வருகிறது.
லக்னோவில் உள்ள பூத் எண் 333 அமைக்கப்பட்டுள்ள ஸ்காலர் ஹோம் பள்ளியில் உள்துறை அமைச்சசர் ராஜ்நாத் சிங் தனது வாக்கினை செலுத்தினார்.
அதுபோல பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி காலையிலேயே வந்து தனது வாக்கினை செலுத்தினார். அவர் லக்னோவில் உள்ள சிட்டி மான்டிசோரி காலேஜில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
லக்னோ தொகுதியில் போட்டியிடும் ராஜ்நாத் சிங், வாக்களித்தபின் செய்தியாளர்களிடம் பேசும்போது, மக்கள் யாரை விரும்புறாங்களோ அவங்களே தலைவராக வருவார்கள் என்று கூறினார்.
மேலும், வெற்றிபெறப்போவது குறித்து தன்னால் எதையும் கணிக்க முடியாது என்றவர், இதற்கான முடிவை லக்னோ வாக்காளர்களிடமே விட்டு விடுகிறேன் என்றவர், யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் மக்களுக்கு முழு உரிமையும் உள்ளது. அவர்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார் களோ, அவர்களே நாட்டை ஆள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.