
காத்மண்டு: ஒடிசா மாநிலத்தை துவைத்தெடுத்த ஃபனி புயலின் தாக்கம், வடக்கே பல நூற்றுக்கணக்கான கி.மீ. தொலைவில் அமைந்த எவரெஸ்ட் சிகரப் பகுதியிலும் உணரப்பட்டுள்ளது.
எவரெஸ்ட் பேஸ் கேம்ப் பகுதியிலுள்ள 20 கூடாரங்கள், பலத்த காற்றால் சேதடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேபாள அரசு தரப்பில், அனைத்து மலையேற்ற ஏஜென்சிகள் மற்றும் உதவி அலுவலர்களுக்கும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
பருவநிலை சீராகும் வரை, அனைத்து மலையேற்ற திட்டங்களையும் ஒத்திபோட்டு, தங்களுடைய வாடிக்கையாளர்களைப் பாதுகாக்குமாறு, ஏஜென்சிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பலத்த காற்றால் 20 கூடாரங்கள் வரை சேதமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், கிழக்கு நேபாளப் பகுதியில், மின்னலுடன் கூடிய காற்றால், மிதமான மழைப் பொழிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]