சென்னை:

நெஞ்சுவலி காரணமாக அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அப்போலோவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  கூறப்படுகிறது.

அதிமுகவின் அவைத்தலைவராக இருப்பவர் மதுசூதனன். இவருக்கு  திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து உடனடியாகசென்னை கிரீம்ஸ் சலையில் உள்ள  அப்போலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுசூதனனுக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனினும் மருத்துவர்கள் மதுசூதனன் உடல்நிலையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்

.மதுசூதனன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅறிந்த  அதிமுகவின் முக்கிய தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று  நலம் விசாரித்து வருகிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஆர்கே நகரில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட மதுசூதனன் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் தோல்வி அடைந்தார்  சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் மற்றும் பெரம்பூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.