திருப்பரங்குன்றம்:

மிழகத்தில் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், ஓசூர், அரவக்குறிச்சி ஆகிய  4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சித் தலைவர்கள் தீவிர ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். அங்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதையொட்டி  4 தொகுதிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 2 நாட்களாக ஒட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து வந்த நிலையில், இன்று திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர் டாக்டர் சரவணனுடன் ஓட்டு வேட்டையாடி வருகிறார்.

முன்னதாக  நேற்று இரவு மதுரை வந்த அவர், அங்குள்ள பிரபலமான  ஓட்டலில் தங்கினார். அதை யடுத்து, இன்று தனது பிரசாரத்தை தொடங்கினார். முதலில்,திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத் தில் இருந்து தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணனுடன் சேர்ந்தது,  சன்னதி தெரு, கோவில் வாசல், பெரியரதவீதி வழியாக கிரிவலப்பாதையில் நடந்தே சென்றார். அந்தப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று  திருப்பரங்குன்றம் தொகுதியில் உள்ள விளாச்சேரியில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்கி,  திருநகர், ஹார்விட்டி, அவனியாபுரம், பெருங்குடி வருகிறார். அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

பின்னர் நாளை காலை வழக்கம்போல 8.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின்,  கைத்தறி நகரில் நெசவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். மாலை 5 மணிக்கு கூத்தியார் குண்டு, தனக்கன் குளம், வேடர்புளியங்குளம், தென்பழஞ்சி, வடபழஞ்சி, நாகமலை புதுக்கோட்டை, புதூர் ஆகிய பகுதிகளில் பேசுகிறார்.