டில்லி:

ன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றதாக  காங்கிரஸ் கட்சி தெரிவித்து உள்ளது. மோடி 1 தடவை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதற்கே மார்த்ட்டிக்கொள்கிறார், நாங்கள் 6 முறை நடத்தியுள்ளோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்லா  தெரிவித்தார்.

நாடு முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்ற வரும் சூழலில் மோடி மற்றும் பாஜகவினர் தங்களது ஆட்சி காலத்தில் நடைபெற்ற  சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலகோடு தாக்குதல் குறித்து மக்களிடையே பேசி வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தும், மீறி பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போதும் பல சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.

கடந்த 2004 முதல் 2014 வரை மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 6 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தவர்,  சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்ட இடங்களை தேதி வாரியாக பட்டியலிட்டார்.

2018 ஜூன் 19ந்தேதி ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் பட்டால் செக்டார், 2011ம் ஆண்டு ஆகஸ்டு 30ந்தேதி சாரதா நதி மற்றும் நீலம் நிதி பள்ளத்தாக்கு , ஜனவரி 6ந்தேதி 2013ம் ஆண்டு சவான் பத்ரா செக்போஸ்ட், 2013ம் ஆண்டு ஜூலை 27 மற்றும் 28ந்தேதி நஷபிர் செக்டர், 2013ம் ஆண்டு ஆகஸ்டு 6ந்தேதி நீலம் வேலி பகுதியில் மீண்டும் ஜனவரி 14ந்தேதி 2014ம் ஆண்டு ஒரு முறையும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடைபெற்றதாக தெரிவித்து உள்ளார்.

அதுபோல, வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும் 2 முறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

அப்போதைய பிரதமர்களான  மன்மோகன்சிங் மற்றும் வாஜ்பாய் போன்றோர்,  இதனை சாதனையாக ஒருபோதும் குறிப்பிடவில்லை என்றவர், ஒரே ஒருமுறை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திவிட்டு, பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் தேச பாதுகாப்பை உறுதி செய்தது போன்று மார்தட்டிக்கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.