சென்னை:
ஃபானி புயல் ஒடிசாவை நோக்கி நகர்ந்து வரும், கடற்கரை பகுதிகளான புதுச்சேரி மற்றும் கடலூரில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தென் மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஃபானி அதிதீவிர புயலாக மாறிய நிலையில், தற்போது, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது ஒடிசா மாநிலம் பூரியில் கரையை கடக்க கூடும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபானி புயல் காரணமாக தமிழகம் புதுச்சேரியின் கடற்கரை பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் , ஒரு சில இடங்களில் மழைக்கு பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை புதுச்சேரி மற்றும் கடலூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. மழை மற்றும் காற்று வேகமாக வீசியதால் புதுச்சேரியின் பல்வேறு இடங்களிலும் கடலூரில் ஒரு சில இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
[youtube-feed feed=1]