கொழும்பு
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு எதிரொலியாக இலங்கை கேபிள் ஆபரேட்டர்கள் ஜகிர் நாயக்கின் இஸ்லாமிய சேனலான அமைதி டிவியை நீக்கி உள்ளனர்
.
கடந்த ஈஸ்டர் பண்டிகை அன்று இலங்கையில் எட்டு இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் கொல்லப்பட்டதாக அதிகார புர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். தேவாலயங்களிலும் சொகுசு ஓட்டல்களிலும் நடந்த இந்த குண்டு வெடிப்புக்கு ஐ எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
தீவிரவாதிகள் புர்கா அணிந்து வந்ததால் அவர்களை அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதை ஒட்டி நாடெங்கும் புர்கா உள்ளிட்ட முகத்தை மறக்கும் அனைத்து உடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி கேபிள் நிறுவனமாக டயலாக் மற்றும் எஸ் எல் டி ஆகிய இரு கேபிள் நிறுவனங்கள் தாங்கள் ஜகிர் நாயக் நடத்தி வரும் இஸ்லாமிய சேனலான அமைதி தொலைக்காட்சியை நீக்கி உள்ளது.
ஏற்கனவே இந்த தொலைக்காட்சி ஒளிபரபுக்கு இந்தியா மற்றும் வங்க தேசம் தடை செய்துள்ளது. இந்த சேனலின் உரிமையாளரான ஜகிர் நாயக் என்பவர் இஸ்லாமிக் ரிசர்ச் ஃபவுண்டேஷன் என்னும் இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த இயக்கம் இஸ்லாமிய தீவிரவாதத்தை பரப்புவதால் பல நாடுகளில் இந்த இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஜகீர் நாயக் தேசிய புலனாய்வு துறையினால் தேடப்பட்டு வரும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளான்.