டில்லி
பாகிஸ்தானுக்கு எதிராக நடக்க விரும்பாததால் இந்தியா அளித்த தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கையை இலங்கை புறக்கணித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தெற்கு ஆசிய நாடான இலங்கைக்கு பாகிஸ்தான் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்தே பாதுகாப்பு ஆலோசகராக உள்ளது. இலங்கைக்கு அப்போதிருந்து 2007 வரை பாகிஸ்தான் 5 கோடிடாலர் (ரூ. 36.96 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களை விற்றுள்ளது. அதன் பிறகு 2009 லிருந்து இந்த ஆயுத கொள்முதல் மும்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக 2009 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் மட்டும் இலங்கை 2.5 கோடி டாலர் (ரூ.18.48 கோடி) மதிப்புள்ள ஆயுதங்களி வாங்கி உள்ளது.
ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று நடந்த தற்கொலப்படை குண்டு வெடிப்பில் சுமார் 253 பேர் மரணம் அடைந்துள்ளனர். அத்துடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்து ஏற்கனவே இந்திய உளவுத்துறை இலங்கை அரசை எச்சரித்துள்ளது. ஆயினும் இலங்கை அரசு அந்த எச்சரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை. தாக்குதலுக்கு பிறகு அதற்கு இலங்கை அரசு வருந்தி உள்ளது.
இது குறித்து இலங்கை ஊடகங்கள், “இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பல வருடங்களாக நல்லுறவு வெளிப்படையாக இருந்து வருகிறது. ஐ எஸ் இயக்கத்தினர் பலர் விடுதலைப் புலிகளுடனான சண்டையின் போது இலங்கைக்கு உதவி உள்ளனர். இலங்கையை பொறுத்த வரை தனது முக்கிய எதிரியான விடுதலைப் புலிகள் முழுவதுமாக அழிக்கப்பட்டதால் வேறு எதிரிகள் கிடையாது என எண்ணி இருந்தது.
அத்துடன் இந்தியாவின் எச்சரிக்கையின் அடிப்படையில் இஸ்லாமிய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது பாகிஸ்தானுக்கு அதிருப்தியை உண்டாக்கும் என இலங்கை எண்ணியது. அது மட்டுமின்றி இஸ்லாமிய அமைப்பு தங்கள் மீது தாக்குதல் நடத்தாது எனவும் இலங்கை நம்பி இருந்தது. எனவே இந்திய அரசு தங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கலகம் செய்யவே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளதாக நினைத்து இந்த எச்சரிக்கையை புறக்கணித்துள்ளது” என செய்திகள் வெளியிட்டுள்ளன.