புதுடெல்லி: சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில், இந்திய வீரர் சத்யன், 24வது இடம்பிடித்து புதிய சாதனைப் படைத்துள்ளார்.

ஏனெனில், இந்திய வீரர் ஒருவர் முதல் 25 இடங்களுக்குள் டேபிள் டென்னிஸ் போட்டியில் வருவதென்பது இதுவே முதல்முறை.

யோகோஹாமாவில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், சத்யன் 6வது இடம் பிடித்ததையடுத்து, 4 இடங்கள் முன்னேறி, உலகத் தரவரிசையில் முதல் 25 இடங்களுக்குள் வந்துள்ளார்.

கடந்தவாரம், ஹங்கேரியில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில், 32வது இடத்திற்கு முன்னேறிய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

“நான் அடைந்துள்ள இந்த மேம்பாட்டிற்கு, எனது பயிற்சியாளருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. இந்த 2019ம் ஆண்டின் இறுதிக்குள், உலகளவில் முதல் 15 இடங்களுக்குள் வரும் இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார் சத்யன்.

அதேநேரத்தில், இதர இந்திய வீரர்களான ஷரத் கமல் 46வது இடத்தையும், மானிகா பத்ரா 59வது இடத்தையும், அர்ச்சனா காமத் 155வது இடத்தையும் பிடித்துள்ளனர்.