டில்லி

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கு விசாரணையில் இருந்து புகார் அளித்த பெண் விலகி உள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவருடைய முன்னாள் பெண் உதவியாளர் புகார் அளித்தார். அத்துடன் தன்னையும் தன் குடும்பத்தினரையும் ரஞ்சன கோகாய் தரப்பின் வற்புறுத்தலால் காவல்துறையினர் கடும் கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் அவர் புகாரில் தெரிவித்தார். இதற்கு ரஞ்சன் கோகாய் மறுப்பு தெரிவித்தார்.

இந்த புகாரை விசாரிக்க நீதிபதி போப்டே தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் பெண் நீதிபதிகளான இந்து மல்கோத்ரா மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு இதுவரை ஒருமுறை ரகசிய விசாரணை நடத்தி உள்ளது.  விசாரணையின் போது புகார் அளித்த பெண்ணுக்கு அவரது வழக்கறிஞர் உடனிருக்க அனுமதி அளிக்கபடவில்லை.

புகார் அளித்த அந்தப் பெண் தன்னுடன் வழக்கறிஞரோ மற்றும் எந்த உதவியாளரோ உடன் இருக்கக் கூடாது என அறிவிக்கபட்டுள்ளதால் தமக்கு அச்சமாக உள்ளதாகவும் அதனால் இந்த விசாரணையில் மேற்கொண்டு கலந்துக் கொள்ள விருப்பம் இல்லை

இதனால் விசாரணையை எதிர்கொள்ள தனக்கு அச்சமாக இருந்தது என்றும் தனக்கு காது சரியாகக் கேட்காததால் தன்னால் நீதிபதி போப்டே கோர்ட் அதிகாரிக்கு தன்னுடைய வாக்குமூலமாக என்னவற்றைக் கூறினார் என்பதும் தன்னால் பின் தொடர முடியாமல் உள்ளது என்று தனது செய்தியாளர்களுக்கான அறிக்கையில் அந்தப் பெண் கூறி உள்ளார்.

மேலும் அந்தப் பெண், “நான் கமிட்டியின் விசாரணை நடைமுறைகளைப் புறக்கணித்து வெளியேறி உள்ளேன். விசாரணைக் குழு இது சாதாரண புகார் அல்ல, பதவியிலிருக்கும் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் என்பதை கவனத்தில் கொள்வதாக எனக்கு தெரியவில்லை. இதில் நியாயமும் சமத்துவமும் கொண்ட நடைமுறை அவசியம்,

என்னிட நீதிபதிகள் குழு இது ரகசிய விசாரணையும் அல்ல, விசாகா கமிட்டி வழிகாட்டுதலின் படியான விசாரணையும் அல்ல, இது இன்ஃபார்மல் விசாரணை நடைமுறைதான் என கூறினார்கள். இந்த விசாரணையில் நடப்பதை நான் ஊடகங்களுக்கோ என் வழக்கறிஞர் விருந்தா கோவருக்கோ தெரிவிக்க கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டது..

விசாரணைக் குழுவினர் என்னிடம் கேட்பது நான் ஏன் இந்தப் புகாரை இவ்வளவு தாமதமாக அளித்ட்தேன் என்பதாக மட்டுமே இருக்கிறது. அத்துடன் எனது தொலைபேசி அழைப்பு பதிவுகள், வாட்ஸ் அப், மற்றும் பிற உரையாடல்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மறுத்து விட்டனர்.

ஏற்கெனவே நான் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் முறையான விசாரணையாக நடைபெற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி இருந்தேன். ஆனால் இந்த கமிட்டியின் மூலம் எனக்கு நீதி கிடைக்கும் என்று நான் கருதவில்லை. ஆதனால் இந்த 3 நீதிபதிகள் கமிட்டியின் முன் நான் இனி ஆஜராக மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.