டில்லி:
டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை பல்வேறு நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட டிக்டாக் செயலி மீண்டும், பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யும் வகையில் கூகுள் கொண்டு வந்துள்ளது.
டிக்டாக் செயலி மூலம் ஆபாசங்கள் தலைதூக்கியதை தொடர்ந்து, அதை தடை செய்ய மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. டிக்டாக் செயலியை டவுன்லோடு செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதனையடுத்து டிக்டாக் செயலியை நீக்குமாறு மத்திய அரசு கூகுளுக்கு கடிதம் எழுதியதால் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் டிக்டாக் செயலி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், மதுரை உயர்நீதி மன்றம் இதுருகுறித்து முடிவு எடுக்குமாறு உத்தரவிட்டது.
அதைத்தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்றம், டிக்டாக் செயலி நிறுவனத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் டிக்டாக் செயலியை அனுமதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தடை நீக்கப்பட்டதால் அதனை டவுன்லோடு செய்யும் வசதியை பிளே ஸ்டோர் மீண்டும் கொண்டுவந்துள்ளது.